சொர்கத்தில் ஜனனித்த காதல்



இதமான காலை தென்றல் வீச... சூரிய ஒளி பட்டுத் தெறிக்க ஆரம்பித்தது... காலைக்கதிவன் வானில் மெல்ல மெல்ல சிரித்துகொண்டிருக்க... அங்கும் இங்குமாய் புரண்டு புரண்டு படுத்திருந்தான்.... அமுதன்.....

அமுதன் வீட்டில் ஒரே மகன், நல்ல வாட்டசாட்டமான ஆண்மகன். அவனின் அழகில்
மயங்காத பெண்களே இல்லை எனலாம். ஆனால், அவனுக்கு பிடித்த பெண்
அமையவில்லை. தனது கனவுகள்ளியை எண்ணி பல வண்ணகள் அனவகனவுகளுடன்
உறக்கத்திலிருந்தான் அமுதன். 


திடீரென தனது தாயின் சத்தம்.....
"அமுதன்.அமுதன்..... ஓபிஸ் போக நேரமாச்சி... இன்னும் எழும்பலயா?"
அமுதனுக்கு அந்தக் குரல் எங்கோ கேட்பது போலிருந்தது... மீண்டும் புரண்டு
படுத்தான்....
திடீரென மணிகூட்டில் அலாரம் சத்தம் கேட்கவே பதறியடித்து எழும்பினான்...
அதற்குள் அவனது தான் தேநீர் கோப்பையோடு வந்தாள்....
"இந்தா அமுதன் டீ குடித்து விட்டு ஒபிஸுக்கு கிளம்பு... நான் சாப்பாட்டை ரெடி பண்ணி
விடுறேன்.." என்றவள், தனது சமையலறைக்கு விரைந்தாள்.....
தனது அறையின் ஜன்னலை திறந்த அமுதனை இளங்காற்று வருடிச் செல்ல... அவன்
முகத்தில் சூரிய ஒளி பட்டுத் தெரித்தது... ஏதோ ஓர் புத்துணர்ச்சி பெற்றது போல் சுகத்தை
உணர்ந்தான். தனது காலைக் கடன்களை முடித்து, தனது தாய் சமைத்த உணவை தனது பையில் சுமந்து
கொண்டு அலுவலகத்துக்கு புரப்பட்டான்.


"அம்மா.... நான் போய் வர்றேன்....
" என தாயின் கால்களை தொட்டு வணங்கி விட்டு
வெளியேறினான். காலை காற்று, சூரிய ஒளி மற்றும் பறவைகளின் சத்தம் அமுதனை வரவேற்பது
போல் உணர்ந்தான். காற்றுடன் வந்த பனித்துளிகள் அவனின் சுவாசத்தை
சுகமாக்கியது. அவனின் கம்பீர நடையும் அவனின் நிறமும் பெண்களை கொள்ளைக்
கொண்டன செல்லும் பாதையில் தனது நண்பர்களை கண்டு மகிழ்ந்தான். அவர்களை
அனைவரும் அலுவலக வண்டியில் போவது வழமை. அன்றும் அவ்வாறே ஒன்று சேர்ந்து
போனார்கள்.


போகும் வழியில் தூரத்தில் அழகிய பெண்ணின் உருவம் தெரிந்தது. அவளின் வாசனை
காற்றுடன் வந்து அமுதனின் மூக்கில் உள்வாங்கின.
நெருக்கிய அந்தப் பெண். உண்மையில் அழகி தான் தேவலோக மங்கை பூமிக்கு
வந்ததது போல் அவளின் அழகில் கிரங்கி போனான் அமுதன்.
பக்கத்தில் வந்த பெண் அமுதனின் நண்பர்களில் ஒருவரான சிவாவை பார்த்து, "ஹாய்
சிவா.... எப்படி இருக்க வீட்டுல எல்லாம் சௌக்கியமா " என்று வினவினாள்
"ஹாய் ஜெஸ்மின்.... வீ ஓல் ஓகே.... ஹவ் எபோட் யூ" என்று சிவா கேட்க
அவளும் "வீ ஓல் பைன்" என்றவள்.
அமுதனை பார்த்து சிரித்தபடியே "ஹாய்" என்று கூறி விடைபெற்றாள்.


தெரு என்பதையே மறந்து அவள் நடை அழகை ரசித்தடி வியந்தபடி நின்றான்
அமுதன். "தான் தேடிய அந்த கனவு கன்னி இவள் தானா" என்று அமுதனை, "அமுதன். அமுதன்.
என்னாச்சி" என்று நண்பன் சிவா கேட்டான்....
"யாருடா அவ ரொம்ப அழகா இருக்கா...."
"என்ன அமுதன் எந்தப் பொண்ணையும் பார்க்காத நீயே இந்தப் பொண்ணை பார்த்து
மெரசலாகிட்டாய்?"
"ஆமாடா..... ஆமா அந்தப் பொண்ணு யாரு?"
"அவ எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிறாள்.... அப்பா பெரிய பிஸ்னஸ் மேன்... ரொம்ப
அழகா இருக்காயில்ல....."
அமுதன் மௌனித்தான். அவனின் சிரிப்பில் காதல் புரிந்தது.....
அதே பூரிப்பில் அலுவலகத்தை அடைந்தனர்.
பார்த்த முதல் நாளே ஜெஸ்மின் தனக்குக் கிடைத்து விடப்போவதைப் போலவே
பிரமை வந்தது. மனத்தில் தனக்காகவே அவள் பிறந்து வளர்ந்திருப்பதாகவே ஓர் பிரமிப்பு
ஏற்பட்டது.


அன்று முழுவதும் அலுவலகத்தில் ஜெஸ்மினின் நினைவாகவே இருந்தான் அமுதன்...
காதல் வயப்பட்ட அமுதனுக்கு சாப்பிட முடியவில்லை. வேலையிலும் ஈடுபாடில்லை.
அன்றைய தினம் அலுவலகம் முடிந்து வீடு திரும்பினான். வீடு வந்த அமுதன் தனிமையில் இருக்க விரும்பினான்.
"எண்டா அமுதா உடம்புக்கு முடியவில்லையா? ஏன் ஒரு மாதிரியாய் இருக்காய்” என
தாய் கேட்டாள், "ஒன்றும் இல்லை.அம்மா கொஞ்சம் டயட் அவ்வளவுதான்" என்றாள் அமுதன்
"அப்படியென்றால் கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்ற தாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஜெஸ்மினை எண்ணி உணர்ச்சி வசப்பட்டான். எந்த பெண் மீதும் இதுவரை அவனுக்குத்
தோன்றியிராத காதல் உணர்வு நெற்றிக் கொண்டது. புள்வெளி தரையில் ஓரமாக ஜெஸ்மினின் மடியில் தலை வைத்துக்கொள்ள வேண்டும். அவளின் செவியோரங்களின் காதல் பாட்டு பாட வேண்டும். ஒரு தளிரை அள்ளிக்
கொள்வது போல ஜெஸ்மினை இறுகத் தழுவிக்கொள்ள வேண்டும். ஒரு பனி தேங்கிய
ரோஜாவை முத்தமிடுவது போல அவளை ஒரே ஒருமுறை முத்தமிட வேண்டும்
என்றெல்லாம் கற்பனையில் மிதந்து கிடந்தான்.

அமுதன் மொத்தத்தில் காதல் பித்தனாகி விட்டான்.
மறுபடியும் அவள் தரிசனம் கிடைக்காதோ என்று ஏங்கினான் துடித்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அலுவலகம் விடுமுறை நாள். அமுதனும் அவனின் தாயும்
* வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு சென்றனர் அங்கு எதிர்பாராத விதமான் ஜெஸ்மினை பார்த்து விட்டான் அமுதன் அவனின் சந்தேஷத்துக்கு அளவேயில்லை அவள் ப்ளூ ஜீன்ஸ், கறுப்பு டொப்ஸும் அணிந்து அமர்க்களமாக வந்திருந்தாள். அவளின் சிவந்த மேனிக்கு கறுப்பு நிற டொப்ஸ் மிகவும் எடுப்பாக இருந்தது.
அவளை ரசித்தவாறு பக்கத்தில் சென்றான் “ஹாய் மேடம்" என்றான்.
"ஹெலோ" என்றவள் "நீங்க யாரு" என யோசிக்க மேடம் அன்று என் பிரெண்ட்
சிவா கூட இருந்தேன் மறந்து விட்டூர்களா? என்றான்.
"ஹா...ஓ...ஓ... ஐஏம் சாரி உங்க பெயர்
"அமுதன்" என்றான்.

"நீங்க நல்ல ஸ்மாட்டா, ஏண்ட்சம்மா இருக்கீங்க" என்றாள்.
நீங்களும் தான் மேடம் சுப்பரா இருக்கீங்க ஜெஸ்மின் புன்னகைத்தாள்
அமுதன் தன்னையே மறந்து விட்டான். அவ்வளவு சந்தோஷம்.
இருவரும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொண்டதுடன், தனது தாய்க்கும்
அறிமுகப்படுத்தி வைத்தான் அமுதன். ஜெஸ்மினிடம் அன்று மிகவும் அக்கறை காட்டினான் அமுதன்.

அன்று இருவரும் தனது தொலைபேசி இலக்கங்களை பகிந்து கொண்டதுடன் நட்பில்
இனைந்தனர். நாட்கள் நகர்ந்தன. மற்றும் ஒரு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் ஜெஸ்மின் தொலைபேசியில்
அழைப்பு விடுத்தாள்.
"ஹெலோ அமுதன்" "எஸ் அமுதன் தான்" என்றான் கரகரத்த குரலுடன் "ஐ எம் ஜெஸ்மின்....."
"எஸ் ஐ நோஷ்" என்றவன்
"இன்றைக்கு லீவு அதனால் இருவரும் லன்ஞ்க்கு போவோமா" என்றாள்.
அமுதனுக்கு தலையை சுற்றி பட்டாம்பூச்சு ஓடியது. அத்தனை சந்தோஷம்
என் இதய தேவதை கூட சாப்பி போறேனா என் உள் மனதில் ஆனந்தத்தில் பூரித்தான்.
அதற்காக அவன் அழகை மெருகேற்றிக் கொண்டான்.அவனின் அழகும் திடகாத்திரமும்
சொல்லவே தேவையில்
லை. ஓர் ஆண்மைக்கு இலக்கணமானவன் என்றே
சொல்லலாம்.
தன் தாயிடம் விடைபெற்று தனது கனவு கன்னியை சந்திப்பதற்கு சென்றான் அமுதன்.
இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். பின்னர் அப்பகுதியிலுள்ள
உயர்தரத்திலான ரெஸ்ட்டூரனுக்கு சென்று அமந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவனும் அவள் அழகில் தன்னை
மறந்தான்.என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
திடீரென அவள் அமுதனைப்பார்த்து "பீர் குடிக்கிறீங்களா?" என்று கேட்டாள்.
"நோ நோ மேடம் எனக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப டிஸிப்ளினா
வளர்ந்துட்டேன்" என புன்னகைத்தான்
"அது ரொம்ப நல்ல விடயம் அமுதன், பட் என்னை இனிமேல் மேடம்னு
கூப்பிடாதீங்க பிலீஸ், பேர் சொல்லியே கூப்பிடுங்க" என்றாள் ஜெஸ்மின்
"ஓகே மேடம் ஓஓஓ ஐஎம் சாரி ஒகே ஜெஸ்மின்" என்றான் அமுதன்.

இருவரும் சிரித்து மகிழந்து மதிய உணவை புசித்தனர்.
அமுதன் கனவுலகில் மிதந்தான். சிவாவிடம் எல்லாத்தையும் கூறி விரைவாக அடுத்த
"ஸ்டெப் மூவ் பண்ண வேண்டும்" என்று எண்ணிக்கொண்டான்.
அன்றைய பொழுது இனிதே முடிந்தது. அதே கனவுலகில் மிதந்த அமுதன் தனது
தொலைபேசியில் சிவாவைத் தொடர்புகொண்டு, "அடே சிவா என் காதலை ஜெஸ்மினிடம் எப்படிசொல்லுறது என்று சொல்லுடா" என்றான்.

அதற்கு சிவா கண்டிப்பா உன்னை அவளுக்கு பிடித்திருக்கும். உன் அழகும் ஸ்மார்டும்
வெகுவாக அவளை கவர்ந்திருக்கும்" எனகூறினான்.
அமுதனின் கண்களில் ஏகோபித்த சந்தோஷம்.
"ஒரு நல்ல நாளா பார்த்து உனது காதலை சொல்லிவிடு. உன் காதலுக்கு நாங்கள் உதவி
செய்கிறோம்" என்றார்கள் சிவாவும் சுந்தரும். சில மணித்தியாளங்கள் கதைத்து விட்டு
சிவாவும் சுந்தரும் விடைபெற்றனர். அவர்களை வழியனுப்பிய அமுதனின்
தொலைபேசி ஏறியது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்த அவனுக்கு இன்ப
அதிர்ச்சி அழைப்பு விடுத்தது ஜெஸ்மின் அவன் இதை எதிர்பார்க்கவில்லை.
"ஹெலோ" என்றான் பதிலுக்கு அவளும் "ஹெலோ" என்றாள் மெல்லிய குரலில்...
இருவரும் சிறிது நேரம் பேசவில்லை.,
பின்னர் "என்ன அமுதன் இன்னும் தூக்கலயா? " என்றாள் ஜெஸ்மின்
"இல்ல உங்க நினைவா"
என்னது "இல்ல தூக்கம் வரல" என்றான் அமுதன்
அப்படியே பேசிய அவர்களின் பேச்சு விடிய விடிய தொடர்ந்தது.
மணிகூடி அலாரம் அடித்தது. அப்போது தான் இவ்வளவு நேரமான பேசியதை
உணர்ந்தனர் இருவரும் இவ்வாறு நாட்கள் வாரங்களாகின வாரங்கள் மாதங்களாகின...
அடுத்த விடுமுறை நாளில் என் தேவதையிடம் என் காதலை சொல்லி விடுவேண்டும்
என தன் மனதில் பேசி கொண்டான்.
அவ்வாறே விடுமுறை நாளில் இருவரும் ரெஸ்ட்டூரண்டில் சந்தித்து கொண்டனர்.

அன்று அவளின் அழகில் மயங்கினான்... அவளை அணு அணுவாக ரசித்தான்......
மனக்கண்ணில் முத்தமிட்டான்.
"அமுதன்.... நாங்க என்ன சாப்பிடலாம்" என்றாள் ஜெஸ்மின்
திடீரென கேட்டதும் உளரினான்.
"என்னாச்சி அமுதன்"
"இல்ல நாம டீ குடிக்கலாம்" என்றான்
"ஒகே" என்றாள் அவளும்
சிறது நேரத்தில் வெளியேறிய அவர்கள் அப்பகுதியிலுள்ள பார்க் ஒன்றுக்கு சென்றனர்...
சிறது தூரம் நடந்தார்கள் .
"அமுதன் ம் என்றவன்

இந்த இடம் அழகா இருக்கு துர்னே என்றாள். ஜெஸ்மின்
'நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்கே அழகு தான் என்றான் அமுதன்.
ஆ....அப்படியா என்றார் ஜெஸ்மின் "ம்... நீ - நிரப்ரா. ரொம்ப அழகு உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்ற அமுதன்
நாரொ "நாம ரெண்டு பேரும் காதலிக்கலாமா" என்றான்...

சற்றும், கோவப்படாமல் சிரித்தபடியே வெட்கி தலைகுளித்தாள் ஜெஸ்மின்,
அன்று முதல் நபர்கள் காதலராகினர். இருவரும் காதலில் சிரிகடித்து பறந்தனர். பலவாறு தமது காதலை பகிர்ந்து கொண்டனர்.
தனது காதலை தாயிடம் கூறினான் அமுதன்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தாய் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாள்.
ஆனால் அவர்களின் மதம் ஒரு தடையாள அமைந்தது.
இரு வீட்டிரும் தமது கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
எவ்வளவோ கெஞ்சி பார்த்தனர் மதம் மாறி திருமணம் நடந்தால் குடும்பத்துடன்
தற்கொலை செய்து கொள்வதாக இரு வீட்டாரும் கூறிவிட்டனர்.
கனவுலகில் மகிழ்ந்து திரிந்த காதலர்கள் தற்போது கண்ணீரும் கவலையுமாக
காணப்பட்டனர்.


அமுதன் தன் தாயிடம் சென்றான் 'அம்மா.... அம்மா..." என்றான்
'என்ன உன் காதல பத்தி மட்டும் பேசாத நானும் உங்க அப்பாவும் வேணாம் என்று
ஏற்கெனவே முடிவு எடுத்து விட்டோம்" என்றார் அம்மா. "அம்மா என்னால ஜெஸ்மினை மறக்க முடியாது அவள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை" என்றான்.

அதை காதில் வாங்கிகொள்ளாதவள் போல் இருந்தார் தாய். ஆனாலும் அமுதனின் மன வேதனை அவனின் கண்ணில் புரிந்தது. தம்மை புரிந்து கொள்வார்கள் என்று சில காலங்கள் மன்றாடினர் அழுதனர். ஆனாலும்
பெற்றோர் தனது முடிவிலிருந்து மாறவில்லை. இனி மாறவும் மாட்டார்கள் இதனால் தமது வாழ்வின் முடிவை காதலர்களான அமுதனும் ஜெஸ்மினும் எடுக்க துணிந்தார்கள். அதன்படி, இருவரும் ஓரிடத்தில் சந்தித்தனர் அப்போது, இருவரும் வீட்டை விட்டு ஓடி போக தீர்மானித்தனர்.


அன்று பௌர்ணமி தினம் அந்த நிலைவை விட அழகிய ஜெஸ்மினை அடைய தீர்மானித்தான் அமுதன். நிலவின் நிழலில் சென்ற அமுதனுடன் தனது உடைமைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் ஜெஸ்மின்.
காதல் ஜோடிகள் இருவரும் வானில் சிறகடித்து பறந்து மகிழ்ந்தனர். பெற்றோர் இங்கு கோபத்தின் தீயில் வெந்தனர். இரு வீட்டாருக்கும் சண்டை மூண்டது. அடித்துக் கொண்டனர் தீய வார்த்தைகளால் திட்டிக் கொண்டதுடன், காதல்
ஜோடிக்கு சாபம் மீது சாபம் விழுந்தது. அமுதன் ஜெஸ்மின் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளார். அதைவிட ஜெஸ்மினும் வைத்திருந்தாள்.


பெற்றோரை விட்டு வெகு தூரத்திலிருந்த காதல் ஜோடியான அமுதனும் ஜெஸ்மினும் பதிவு திருமணம் செய்து கொள்வதற்கு உதவுமாறு நண்பர்களான சிவாவுக்கும் சுந்தருக்கும் அழைப்பு விடுதான் அமுதன். இவர்கள் அழைத்ததன் பேரில் அவர்கள் இருவரும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அங்கு தனது நண்பர்களை கண்டதும் அமுதனால் தங்கமுடியாது கதறியழுது விட்டான். "நண்பா நீ எதுக்குமே பயப்படாதே நாம் உனக்கு உதவி செய்வதற்காகவே வந்துள்ளோம் " என்று ஆறுதல் வார்த்தை கூறி சமாதானப்படுத்தினான்.


பெற்றோரின் எதிர்பை மீறி எனது கனவுகன்னியை அடையப் போகிறேன் என்ற சந்தோஷத்துடன் திருமண வேலையை ஆரம்பித்தான் அமுதன். திருமணமாகும் சந்தோஷத்தில் இரு உள்ளங்களும் சிரகடித்து பறந்தது. ஆம். திருமணத்துக்கு இன்றும் இரண்டே நாட்கள் தான் உள்ளது காலையில் எழுந்த அமுதனுக்கு ஜெஸ்மின் தேநீரை எடுத்து வந்து கொடுத்தாள். அமுதனின் கண்களில் கண்ணீர் வடிந்தோடியது "அமுதன்.... என்னாச்சி" என அவனின் தலையை கோதியவாறு பாசத்துடன் கேட்டாள் ஜெஸ்மின்.
"அம்மா நினைவு வந்து விட்டது ஜெம்மின் விடிந்தால் திருமணம் ஆனால், எமது திருமணத்துக்கு அம்மா அப்பாவை அழைக்க முடியவினவயே" என கண் கலங்கினான். ஜெஸ்மினுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை
காலை 9 மணிக்கு திருமண சேலை, பூமாலை, வேட்டி சட்டை எல்லாவற்றையும் வாங்க
போகவேண்டும் நான் குளித்து விட்டு வர்ருகிறேன் என்று எழுந்தவனை அனைத்து முத்தமிட்டாள் ஜெஸ்மின் அமுதனும் அவளை இழுத்து அரைத்தபடி முத்தமிட்டான், அவ்விடத்தில் இருவரும் தனது அன்பை பகிர்ந்து கொண்டனர்.

Comments