சித்திரைப் பெண்ணே!

சித்திரை பிறந்தது
சித்தமது மலர்ந்தது
சீர்குலைந்த வாழ்வது
சீராக நிலைத்திட
சிறப்பாக பிறந்திட்டாள்
சித்திரையாள்!
வறுமை ஒழியட்டும்
குதூகலம் பொழியட்டும்
நல்ல நேரம் பார்த்து - இங்கு
மருத்து நீர் தேய்த்து
மங்களமாய் குளித்து
மாதா பிதாவை வணங்கி
புத்தாடை அணிந்து
பூக்கும் புது வருடத்தை
வரவேற்போம் இப்பார் தன்னில்!
பட்டாசு வெடித்து பாற்சோறு சமைத்து
பலவித சுவையுடன் பரிமாரி உண்போம்
இனிவரும் காலமதில்
இன, மத பேதமின்றி
இன்புற்று வாழ வைக்க
வந்தாளே சித்திரையாள்!
மகிழ்ச்சியை பகிர்ந்து
கை விசேடம் கொடுத்து
களிப்புடன் வாழ வைக்க
வந்திட்டாள் சித்திரையாள்!
வசந்தங்கள் பாடி வரவேற்போம்
புதுவருடத்தை!
பூத்துக் குலுங்கும்
புண்ணிய பூமியாய்
மாற்றட்டும் இந்த
புது வருடம்!
ஆனந்தம் பொங்கி
ஆரவாரம் செய்து
மாதர்கள் ஊஞ்சளிலும்
ஆடவர்கள்
தாயம், கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும்
விளையாடி
சித்திரையின் வருகையால்
களிப்புக் கொளவதே
கண் கொள்ளாக் காட்சி!
சிறுவர்கள் சிங்காரமாய்
வினோத உடையுடன்
ரீங்காரம் செய்வதே
இன்னும் பெரும் சிறப்பு!
விழாக் கோலம் கண்ட
சிறப்பு விருந்தினராம்
சித்திரை என்னும் பெண்ணவளை
பான்னாடை போர்த்தி
பூமாவை சாற்றி
இன்புற்று வரவேற்போம்
இத் தரணியில்!
வருக சித்திரையாள் - எம்
வாழ்வது சுபிட்சம் பெற
வாழ்த்துகிறேன்
நான் உன்னை
- ரேணுகாதாஸ்

சித்திரை பிறந்தது
சித்தமது மலர்ந்தது
சீர்குலைந்த வாழ்வது
சீராக நிலைத்திட
சிறப்பாக பிறந்திட்டாள்
சித்திரையாள்!
வறுமை ஒழியட்டும்
குதூகலம் பொழியட்டும்
நல்ல நேரம் பார்த்து - இங்கு
மருத்து நீர் தேய்த்து
மங்களமாய் குளித்து
மாதா பிதாவை வணங்கி
புத்தாடை அணிந்து
பூக்கும் புது வருடத்தை
வரவேற்போம் இப்பார் தன்னில்!
பட்டாசு வெடித்து பாற்சோறு சமைத்து
பலவித சுவையுடன் பரிமாரி உண்போம்
இனிவரும் காலமதில்
இன, மத பேதமின்றி
இன்புற்று வாழ வைக்க
வந்தாளே சித்திரையாள்!
மகிழ்ச்சியை பகிர்ந்து
கை விசேடம் கொடுத்து
களிப்புடன் வாழ வைக்க
வந்திட்டாள் சித்திரையாள்!
வசந்தங்கள் பாடி வரவேற்போம்
புதுவருடத்தை!
பூத்துக் குலுங்கும்
புண்ணிய பூமியாய்
மாற்றட்டும் இந்த
புது வருடம்!
ஆனந்தம் பொங்கி
ஆரவாரம் செய்து
மாதர்கள் ஊஞ்சளிலும்
ஆடவர்கள்
தாயம், கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும்
விளையாடி
சித்திரையின் வருகையால்
களிப்புக் கொளவதே
கண் கொள்ளாக் காட்சி!
சிறுவர்கள் சிங்காரமாய்
வினோத உடையுடன்
ரீங்காரம் செய்வதே
இன்னும் பெரும் சிறப்பு!
விழாக் கோலம் கண்ட
சிறப்பு விருந்தினராம்
சித்திரை என்னும் பெண்ணவளை
பான்னாடை போர்த்தி
பூமாவை சாற்றி
இன்புற்று வரவேற்போம்
இத் தரணியில்!
வருக சித்திரையாள் - எம்
வாழ்வது சுபிட்சம் பெற
வாழ்த்துகிறேன்
நான் உன்னை
- ரேணுகாதாஸ்
Comments
Post a Comment