மௌன புன்னகை கவிதை

மௌன புன்னகையே!


உன்
உதட்டில் மலர்ந்த
மௌன புன்னகையால்
பூக்களும் மிக விரையிவல்
மலர்கின்றதே...
உன் மௌன
புன்னனைக்காக
இலையுதிர் கால மரத்தின்
ஒற்றையிலையாக
காத்துக் கிடக்கின்றேன்...

ஒரு தரம் எனை பார்த்து
புன்னகைத்தால் போதும்
நழுவிய இலைகளில்
ஒன்றாய் போவேன்...

உன் வசீகரப் புன்னகையால்
வயப்பட்ட வாசகன் நானே
உன்
புன்னகையின் பரவசத்தின்
மிதந்து
தடுமாறும் நினைவுகளுடன்  என்
கவனத்தை உன் மீது சார்த்தி
புன்னகையை மட்டும்
ரசித்தேன்...

இதயத்தை துளையிட்டு
இரத்தத்தை பீறிடுகிறது
உன் அழகிய
மௌன புன்னகை
இருளை விலக்கி
விடியலை கிளர்த்தெழும்
சூரிய ஒளி போன்றது...
உன்
மௌன புன்னகை

திசையைக் கூட
தொலைத்து விட்டு
சுற்றித் திரியும்
பாவியாகி விட்டேன்
உன்மௌன புன்னகையால்...
பிரியத்துடன் கிடந்த
சொற்ப சந்தோஷங்களை
இதயத்தில் கோர்த்து
தனிமையின் வெளியில்
சுகம் புணர்கிறது
உன்
மௌன புன்னகை


- ரேணுகா தாஸ்

Comments