மின்மினிகள் கவிதை

மின்மினிகள்

நதியின் ஜாலங்களில்
நாணல்கள் நடனமிடுகின்றன
நிலா வெளியில்
நீடித்து அமர்ந்து
நுதலை உயர்த்தி
விறைத்துப் பார்த்துக்கொண்டு
ரசித்தேன் அந்த காட்சிதன்னை
விண்ணில் தோன்றிய
மின்மினிப் பூச்சிகள்
தண்ணீரில் பட்டு
தீ போன்ற ஒளியுடன்
துளைத்துச் செல்வதை
தூரத்தில் உட்கார்ந்து
தீவிர சிந்தனையில்
தன்னையே மறந்து
தனிமையை உணராமல்
நிலா பெண்ணுடன்
நிம்மதியாய் மடிசாய்ந்து
உரையாடிக் கொண்டிருப்பது போல்
உள்ளமதில் நினைத்து
உறக்கமின்றி
விடியலை எதிர்பாராமல்
ரசனயில் மூல்கிக் கிடந்தேனே!
நானறியாத
விடியல் காலையில்
தட்டி எழுப்பி
என்னிடமிருந்து
விடைபெற்றாள்  - அந்த
அழகிய நிலாப் பெண்
கலைந்தது கனவு
காற்றலையாய்

- ரேணுகாதாஸ்

Comments