சுனாமி கவிதை

சுனாமி!

அலையே நீ...
எத்தனை மௌனமாய் இருந்தாய்!
எம்...
மண் மீது நீ கொண்ட காதலால்
எத்தனை முறை இம்மண்ணை 
அன்பாய்
தொட்டு தொட்டு சென்றாய் 
 பின்
உனக்கென்ன உயிர்களிடையே
அத்தனை கோபம்?


உன் கோரத் தாண்டவத்தால்
கொலைகள் பல செய்து
சாதனையே புரிந்து விட்டாயே!

எம்
மண் இப்போது
பிணங்களின் மயாணமாகி கிடக்கின்றதே!
அதை நீ அறிந்து
மகிழ்கின்றாயா?
சுனாமியே!

உன்னால் விளைந்த மரணத்தால்
உயிரினங்களுக்கு
மரணத்தின் மேலுள்ள
பயமும்...
மரியாதையும் போய் விட்டதே!

கடலே
நீ!
அழிவின் சிகரத்தைத் தாண்டியவள்!

உயிரெல்லாம்
கரை புரண்டு அடித்துக்கொண்டு
போகும்போது கூட
உனக்கு
அதன்
அழு குரல் கேட்க வில்லையா?
மௌனமாய் இருந்து...
மகத்தான சாதனை
செய்து விட்டாயே!

ரேணுகா தாஸ்

Comments