தை மகளே கவிதை

 மகளே நீ வருக!

 பாரெங்கும் வாருங்கள்  இங்கு
மனம் பொங்கி மகிழுங்கள்
தமிழர் கலாசாரத்தின் திருநாளாம்
பொங்கல் என்னும் பெருநாள்...
புத்தாடை அணிந்திங்கு  மனதில்
புதுக்கோலம் பூத்த இங்கு
மகிழ்துள்ளம் வரவேற்கும்
பொங்கல் என்னும் பூமகளை
கொடுமை அழியட்டும்!
தர்மம் வெல்லட்டும்!
பொல்லா மனங்கலெல்லாம்
இனியேனும் திருந்தட்டும்!

சிங்காரத் தமிழர் எங்கும்
சிறப்புடன் வாழ வைக்க
சீர் கொண்டு வந்திட்டாள்
பொங்கல் என்னும் பூ மகள்!
வியர்வையின் ஈரத்தை
வெற்றியோடு சிந்தி இங்கு
விதைத்து வைத்த தளிரெல்லாம்
நலமாய் தழைக்கட்டும் என்று
வாழ்த்துரைக்க வந்திட்டாள்
தைத்திரு மகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்  என்று
எத்திக்கிலும் மங்களம் பெருக
மாதரைப் பார்த்து மகிழ்வுடன
பொங்கல் பானை பெருமையுடன்
பொங்கிச் சிரிக்கும் தைத்திருநாளில்!

Add caption
உழுது முடித்த மனதினுள்
நல்லெண்ண விதைகளை விதைத்து  எம்
நல் வாழ்வு உயர்வு பெற
வரவேற்போம் பொங்கல் என்னும்
பூமகளை!

 - ரேணுகா தாஸ்

Comments