காதல் காவியம்.... கவிதை

காதல் காவியம்.
தென்றலில் அசைபோடும்
பூவிதழ்கள் போன்று
நாற்றில் ஊற்றெடுக்கும்
உறவானது எம் காதல் - என்
அசைவுகள் யாவும்
என் கண்முன்னே -  உன்
கண்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன...
அதுவே
எம் காதலுக்கு கருவானதே!
நிசப்த அலைவரிசையில்
எனக்கு மட்டும்   உன்...
காதல் கானங்கள் ஒலிக்கிறது - அங்கு
அன்பாய் பெருக்கெடுக்கும்
உன்
காதல் கானங்களைக் கேட்டு
நான் சாகாவரம் பெறுகிறேன்...
கனவுக்குள்ளும் நம் காதல்
காற்றலையாய் உலாவுகின்றன...
ஒவ்வொரு நாளும்  நீ
காதலால் சொல்லும் கவிதைகளை
என்...
இதயச் சுவர்களில்
பச்சை குத்தி வைத்து
வருடாந்தம் வரும்
காதலர் தினத்தின் போது
காதலர் தின கீதமாய்
பாடிக்கொண்டிருக்கின்றேன்...
இவ்வருடமும்   -நீ
தந்த காவிய கானத்தை
எம்மைப் போன்ற
காதலருக்காய் சமர்ப்பிக்கின்றேன்...! 

 ரேணுகா தாஸ்

Comments