மலை அகம் கவிதை

மலை அகம்


ஏக்கங்கள் நிறைந்த முகபாவம்
வெற்றிலை போட்ட வறண்ட உதடடின்
முணுமுணுக்கும் வார்த்தைகள்  அது
வேண்டும்... வேண்டும்... என்ற மனம்
அதுதான்
வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஆர்வம்
அழுக்கு படிந்த ஆடையுடன்
கைகள் இரண்டிலும் படர்ந்த கறைகள்...
வெயிலில் கருமையான மேனியுடன்
வியர்வை சிந்தி உழைத்த உடம்பது
முதலாளிக்கு அல்லும் பகலும் மாடாய் உழைத்து
வருவாயைத் தேடிக்கொடுக்கும் மானிடர்கள்
கொடுமை!!!
கொடுமை!!!
ஓவ்வொரு நிமிடமும் உயிரை வாங்கும்
முதலாளிகள்...
உரிமைக் குரல் கொடுக்க யாருமில்லை
ஏமாற்றி...
ஏமாந்து கிடக்கும் நெஞ்சங்கள்
ஒரு வேளை சாப்பாட்டுக்காய்
ஒன்பது மணி நேரம் வேலை செய்தும்
கிடைப்பதென்னவோ சொற்ப பணம் தான்!
ஓட்டை வீடு உடைந்த கூரை
வாக்குகள் அளித்தும்
வழங்கவில்லை உரிமைதனை
பள்ளிக்கூடம் இல்லாததால்...
பாதியிலே படிப்பை நிறுத்தி
பட்டணத்துக்கு பறந்து விடும்
பரிதாப இளைஞர்கள்
பழுதாகி போகின்றனர்!
நோய் எம்மை தாக்குமென்றால்
அதற்கும் கூட மருந்தெங்கே!
மருத்துவமனை எங்கே!
வாழ்வு என்பதை விட
மரணமே அதிகமிங்கே!
மலைவாழ் மக்கள் எம்மை
வாழ வைக்கும் வாஞ்சை கொண்ட
நெஞசம் வர வேண்டும் - இங்கே
சூழவுள்ள மனங்கள் யாவும்
சுகம் பெற வேண்டும் என்றும்...

- ரேணுகாதாஸ்

Comments